Sunday, March 3, 2013

2:47 PM
1

இலங்கை அரசுக்கும் சிகரெட் கம்பனிக்கும் இடையே தற்போது வழக்கு போய்க்கொண்டிருக்கின்றது. சிகரெட் பெட்டிகளிலில் புகையிலை பாவனையால் ஏற்படும் விளைவுகளை படமாக பொறிக்க வேண்டும் என்கிறது அரசு. இல்லை என்று அடம்பிடிக்கின்றது சிகரெட் கம்பனி. அப்படி படம் பொறிக்கப்பட்டால் புகைக்கும் திருவாளர்கள் என்ன மாதிரியெல்லாம்  பேசிக்கொள்வார்கள் என்று ஒரு சின்ன கற்பனை.


ஈரல் அழுகி தொங்கிற படத்தை பார்த்துகிட்டு ஏதோ இதுக்கு முன்னாடி தெரியாத மாதிரியே “பயங்கரமாத்தான்டாப்பா இருக்கு” என்று சொல்லி சிகரெட் வாய் வைக்கும் பக்கம் கீழாக இருக்கும்படி நிலைக்குத்தாக வைத்து கட்டைவிரலில் ரெண்டு தட்டு தட்டி அப்பிடியே வாயில் வைத்து பத்த வைத்து  லேசா இழுத்து இழுத்து புகையை ரவுண்டு கட்டுவாங்க பாரு.. எதுக்குடா படம் போட்டாய்ங்க என்று கேட்க தோணும்.



இந்த படத்தை பார்த்துட்டு கட்டாயம் நிறையை பேர் மாறிடுவானுங்க மச்சி, ஆனா நம்மதான் மாறமாட்டம்போல” என பேசிக்கிட்டே ஒரு சிகரெட்ட லவ்ல இரண்டு மூணுபேர் மாறி மாறி பத்திகிட்டே இருப்பாங்க.



இப்பிடி வாறதெல்லாம் செயின் ஸ்மொக்கர்ஸ்க்குதான்டா.. நமக்கு சான்ஸே இல்ல” அடப்பாவிகளா புகைக்கிறத நியாயப்படுத்த இப்பிடியெல்லாம் யோசிக்கிறிங்களே.

இனி மெல்ல மெல்ல சிகரெட்டை குறைக்கத்தான் வேணும். இல்லாட்டா சிக்கல்தான்” இப்பிடி சொல்லியே காலம் மட்டும்தான் கடக்குமே தவிர சிகரெட் பாவனை குறையாது.


சிகரெட் பிடிக்கிறது பிரச்சினை இல்லை, அதுக்கேற்ற சாப்பாடு சாப்பிட்டா சரி. புருட்ஸ் கூட சாப்பிட்டாலே போதும். பிறகு ஒரு பாதிப்பும் வராது” ஐயோ.. ஐயோ.. ஐயோ.. கொன்னுட்டீங்கடா.

ஆனா மாறணும் நினைக்கிறவங்களால நிச்சயமாக மாறமுடியும். தனிமனித மாற்றமே சமூக மாற்றம்.

1 comments: